Paristamil Navigation Paristamil advert login

காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம்: ஒழுங்காற்று குழு பரிந்துரை

காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம்: ஒழுங்காற்று குழு பரிந்துரை

25 ஆவணி 2026 செவ்வாய் 10:57 | பார்வைகள் : 237


காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 141-வது கூட்டம் டெல்லியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்றது. இதில் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரை குறித்து நாளை நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, அதன்பின் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரைப்படி 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்