Paristamil Navigation Paristamil advert login

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி

25 ஆவணி 2026 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 230


அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி கற்பிக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

  • தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • ‘வாசிப்பை நேசிப்போம்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழங்கப்படும்.
  • ‘ஓடி விளையாடு’ திட்டத்தின் கீழ் தினமும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும்.
    மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும்.
  • 2 முதல் 9-ம் வகுப்பு வரை ‘திறன் பிளஸ்’ திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி அறிமுகப்படுத்தப்படும்.
  • மாணவர்களின் புத்தகப்பை சுமைக்கு முடிவு கட்டும் வகையில் ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாணவர்களின் திறனை உறுதி செய்ய 10.5 லட்சம் பேருக்கு ‘திறன் பிளஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாணவர்களின் தனித்துவமான கற்றலை வலுப்படுத்த ‘தன்னிலை கற்றல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்களில் 358 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு நாளும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • 500 பள்ளிகளில் 68 மாணவர்களுக்கு ஏஐ சார்ந்த தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 2 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்துள்ளவர்களின் குழந்தைகளுக்கு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச கல்வி வழங்கப்படும்.
  • மாதத்தில் ஒரு நாள் ‘புத்தகப்பை இல்லா நாள்’ கடைப்பிடிக்கப்படும்.

தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்

  • முதல்வரின் பெருங்கனவான மீண்டும் உலகத் தமிழர் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
  • கணினியில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றும் இருவருக்கு ‘இணைய தமிழ் செம்மல்’ விருது வழங்கப்படும்.
  • அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கூடுதலாக ரூ.5.75 கோடி நிதி வழங்கப்படும்.

நகர்ப்புற துறை அறிவிப்புகள்

  • பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில், தேனியில் ரூ.2.50 கோடி செலவில் அவரது திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும்.
  • வேலு நாச்சியார், ஈவெரா, அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் மற்றும் காமராஜருக்கு சென்னையில் கோட்டம் அமைக்கப்படும்.
  • சென்னையில் கழிவுநீரில் இருந்து அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு தயாரிக்கப்படும்.
  • பாதாள சாக்கடை திட்டம் இயந்திரமயமாக்கப்படும்.
  • 1 லட்சம் எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்படும்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்