Paristamil Navigation Paristamil advert login

திமுக எம்எல்ஏவின் பேச்சு குறித்து சட்டசபையில் விவாதம்

திமுக எம்எல்ஏவின் பேச்சு குறித்து சட்டசபையில் விவாதம்

25 ஆவணி 2026 செவ்வாய் 12:13 | பார்வைகள் : 234


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகர் பேசியபோது, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனாவை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.

அமைச்சர் விஜயலட்சுமி:
தி.மு.க. எம்எல்ஏ ஒருவர் பொதுவெளியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மரியாதையின்றியும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது.

அதேபோல், தொழில்துறை அமைச்சரை பெண் என்றும் பாராமல் மரியாதையின்றி பேசியதும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் தோல்வி மற்றும் இயலாமை காரணமாக தி.மு.க.வினர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சபாநாயகர் பிரபாகர்:
நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், காலையிலேயே இந்தப் பிரச்னையை எனது கவனத்துக்கு கொண்டு வந்தார். இது சபை உரிமை மீறலாகுமா என்றும் கேட்டார்.

எம்எல்ஏ வெளியில் பேசியிருந்தாலும், அந்தப் பேச்சு முதல்வர் மற்றும் அமைச்சர்களின் மாண்பைக் குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்