தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம்: “நானே சாட்சி” – அமைச்சர் மரிய வில்சன்
25 ஆவணி 2026 செவ்வாய் 13:17 | பார்வைகள் : 134
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தானே ஒரு சாட்சி என்றும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நடந்த விவாதம்
அமைச்சர் மரிய வில்சன்:
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் ஏராளமானோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் கட்டாயப்படுத்தி பணம் பெறப்பட்டுள்ளன. இதில் மிகப்பெரிய அளவில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். கட்டாயப்படுத்தி என்னிடம் பணம் வாங்கினர்.
நான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, அதற்கு சாட்சி கேட்கின்றனர். நானே ஒரு சாட்சிதான். என் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தாலும் பரவாயில்லை; அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
சென்னையின் தி.நகரில் எந்த இடத்தில் வைத்து, எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது என்பதையும் என்னால் தெரிவிக்க முடியும். சிறுபான்மை கல்வி நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பதையும் என்னால் கூற முடியும்.
இவ்வாறு அமைச்சர் மரிய வில்சன் பேசினார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி
உயர்கல்வித்துறை தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடைபெற்றபோது, “ஒரு அமைச்சர் நானே லஞ்சம் கொடுத்தேன்” என்று கூறுகிறார். அவர் பேசியது பொதுக்கூட்டத்தில் அல்ல; சட்டசபையில்.
பொதுக்கூட்டத்தில் இதுபோன்று பேசினால் எடுக்கப்படும் நடவடிக்கை வேறு; சட்டசபையில் பேசினால் எடுக்கப்படும் நடவடிக்கை வேறு.
அவர் கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்பதை கல்வித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர் கிருஷ்ணகிரியில் கல்வி நிறுவனம் நடத்துவதாகக் கூறிவிட்டு, பல்லாவரத்தில் நடத்துகிறார்.
அவர் லஞ்சம் கொடுத்ததாக சட்டசபையிலேயே தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு மகேஷ் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire