கூட்டணி இல்லையென்றால் தி.மு.க.வுக்கு 10 சீட் கூட இல்லை: ஆதவ்
25 ஆவணி 2026 செவ்வாய் 14:20 | பார்வைகள் : 115
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவால்தான் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடிந்தது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தி.மு.க. குரல் கொடுப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் கூறுகிறார். தி.மு.க. தலைவரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சென்னை அறிவாலயத்தில் அம்பேத்கர் மற்றும் ஈவெரா சிலைகளை அமைக்க வேண்டும்.
அமைச்சர் விஸ்வநாதன்:
முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இது மிகப்பெரிய கவுரவம். ஆனால், தி.மு.க. மட்டுமே இந்த சமூகத்தின் மேம்பாட்டுக்கு வித்திட்டது போல பேசுகின்றனர்.
தி.மு.க. – கோவி.செழியன்:
தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறுகிறார். மேலூர் தொகுதியில் தி.மு.க. தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்று, இன்று அமைச்சராக இருக்கிறீர்கள். கருப்பு, சிவப்பு வேட்டி அணிந்த தொண்டர்களின் உழைப்பே அதற்கு காரணம்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் வெற்றிக்கு தி.மு.க.வே காரணம் என்று கூறி வருகின்றனர். 22 கட்சிகள் அடங்கிய கூட்டணியுடன் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் மற்றும் ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க. 10 இடங்களில் கூட வெற்றி பெற்றிருக்காது. சென்னையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவால்தான் தி.மு.க.வுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்தன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் 15 சதவீத வாக்குகள் இல்லையென்றால், சென்னையில் இந்த இரண்டு தொகுதிகளில்கூட தி.மு.க. வெற்றி பெற்றிருக்காது.
தி.மு.க. இன்று எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பதற்கும் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளே காரணம். எங்களைப் போல தனித்து போட்டியிட்டு தி.மு.க.வால் 50 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா?
தி.மு.க. – கோவி.செழியன்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, தி.மு.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த இடத்தையும் ராஜினாமா செய்தனர். பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தமிழகத்தை தி.மு.க. ஆட்சி செய்தது.
தி.மு.க. – கே.என்.நேரு:
எங்களது கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன்தான் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. உங்களுக்கு ரோஷம் இருந்தால், அவர்களை வெளியே அனுப்பிவிட்டு தனியாக ஆட்சி அமைத்துக் கொள்ளுங்கள்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த அடையாளம் உள்ளது. யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. யாருடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அவரவர் நிலைப்பாடு. தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிவுக்கு வந்துவிடும்.
தி.மு.க. – கே.என்.நேரு:
எங்களை விட்டுவிட்டு காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதா?
அமைச்சர் செங்கோட்டையன்:
2006-ல் 97 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தீர்கள். காங்கிரசுக்கு ஏதாவது உதவி செய்தீர்களா?
தி.மு.க. – கே.என்.நேரு:
காங்கிரஸ் தலைவரை பிரதமராக அறிவித்தது தி.மு.க.தான்.
அமைச்சர் செங்கோட்டையன்:
மத்தியில் 11 அமைச்சர்களைப் பெற்றுத்தான் இதைச் செய்தீர்கள்.
காங்கிரஸ் – தாரகை கத்பட்:
காங்கிரசுடனான கூட்டணியின் காரணமாகத்தான் தி.மு.க.வுக்கு அதிக அளவிலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துள்ளனர்.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire