Paristamil Navigation Paristamil advert login

மருத்துவக் கட்டண உச்சவரம்பு ஆண்டுக்கு 140 யூரோக்களாக உயர்வு!!

மருத்துவக் கட்டண உச்சவரம்பு ஆண்டுக்கு 140 யூரோக்களாக உயர்வு!!

24 ஆவணி 2026 திங்கள் 21:21 | பார்வைகள் : 568


மருத்துவச் செலவுகளுக்கான நோயாளிகளின் ஆண்டு கட்டண வரம்பு தற்போது உள்ள 100 யூரோவிலிருந்து 140 யூரோக்களாக உயர்த்தப்பட உள்ளது. மருந்துகள் மற்றும் சில மருத்துவச் சேவைகளுக்குப் பொருந்தும் இந்த மாற்றம், நோயாளிகள் நேரடியாகச் செலுத்த வேண்டிய தொகையை அதிகரிக்கிறது.

அரசு இந்த மாற்றத்தை சுகாதாரச் செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் நிதிச் சுமையை குறைப்பதே நோக்கமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதிக மருத்துவச் செலவுகள் உள்ள நோயாளிகளுக்கு இது கூடுதல் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதற்கு முன்பு ஆண்டு முழுவதும் ஒரு நோயாளி செலுத்த வேண்டிய மருத்துவக் கட்டணங்களுக்கான உச்சவரம்பு 100 யூரோக்களாக இருந்தது. தற்போது அது 140 யூரோவக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சிலர் ஆண்டுக்கு கூடுதலாக 40 யூரோக்கள் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

இந்த முடிவு சுகாதாரச் செலவுகள் மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அடிக்கடி மருந்துகள் வாங்க வேண்டியவர்கள் அல்லது தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மீது இந்த உயர்வு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்