Paristamil Navigation Paristamil advert login

H-1B விசா விண்ணப்ப கட்டணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் - ட்ரம்ப் அதிரடி

H-1B விசா விண்ணப்ப கட்டணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் - ட்ரம்ப் அதிரடி

25 ஆவணி 2026 செவ்வாய் 07:12 | பார்வைகள் : 134


அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டாலர் கட்டணம் விதிக்க அமெரிக்கா முன்மொழிந்தது.

அமெரிக்க நாடாளுமன்றம் தற்போது H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது.

H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தை ரத்து செய்து மாவட்ட நீதிபதியின் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரிய மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உள்நாட்டு பாதுகாப்பு துறையின் இந்த புது முன்மொழிவு வந்துள்ளது.

தற்போதுள்ள H-1B விண்ணப்ப கட்டணத்துடன் இணைப்பதற்கு பதிலாக, 1,03,265 அமெரிக்க டாலர் தொகையை ஒரு தனிப்பட்ட, கூடுதல் H-1B கட்டணமாக செயல்படுத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை முன்மொழிகிறது என்று 'ஃபெடரல் ரெஜிஸ்டர்' இதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.

அடுத்த 30 நாட்களுக்குள் இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு இத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி விதிமுறை வெளியிடப்படும். இந்தக் கட்டணம் H-1B ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட மனுக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மனுக்களுக்குப் பொருந்தாது என்றும்  கூறப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட விதியின் கீழ், குறிப்பிட்ட லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்யும் மனுக்கள் போன்ற ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்படாத H-1B மனுக்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தாது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்