ஜெர்மனியில் அதிகரிக்கும் முதியோர் மக்கள் தொகை - சமூகச் செலவுகள் உயர்வு
25 ஆவணி 2026 செவ்வாய் 11:34 | பார்வைகள் : 130
ஜெர்மனியின் முதியோர் மக்கள் தொகை காரணமாக சமூகச் செலவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஜெர்மனியில் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக சமூகச் செலவுகள் வரலாற்றிலேயே அதிக உயர்வை எட்டியுள்ளதாக Ifo Institute வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
2025-ஆம் ஆண்டில், வயது முதிர்ச்சி மற்றும் நோய்கள் தொடர்பான செலவுகள் மொத்த சமூகச் செலவுகளில் சுமார் 70 சதவீதமாக இருந்தது.
1992-ஆம் ஆண்டிலிருந்து சமூகச் செலவுகளில் ஏற்பட்ட உண்மையான உயர்வில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவை முதியோர் மற்றும் நோய்கள் தொடர்பான செலவுகளால் ஏற்பட்டதாக ஆய்வு கூறுகிறது.
Ifo ஆராய்ச்சியாளர் எமிலி ஹோஸ்லிங்கர், “சமூகச் செலவுகள் GDP-வை விட வேகமாக உயர்கின்றன. அதனால் பலவீனமான பொருளாதார நிலையும் சமூகச் செலவுகளின் பங்கை அதிகரிக்கச் செய்கிறது” என தெரிவித்துள்ளார்.
2019 முதல் 2025 வரை, சமூகச் செலவுகள் 11.5 சதவீதம் உடர்ந்துள்ளன. இது சுமார் 104 பில்லியன் யூரோ (121.33 பில்லியன் டொலர்) ஆகும். இதே காலத்தில், சமூகச் செலவுகள் GDP-யில் 29.6 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முதியோர் மக்கள் தொகைக்கு மருத்துவம் மற்றும் பராமரிப்பு செலவுகள்
கூட்டாட்சி ஓய்வூதியக் கட்டணங்கள் அதிகரித்தது
ஜேர்மனியின் மக்கள் தொகை அமைப்பில் ஏற்பட்ட மாற்றம், தலைமுறைகளுக்கிடையே நலவாழ்வு சுமையை அதிகரிக்கிறது. இதனால், அரசின் நிதி நிலைமைக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை, ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடியதாகவும், எதிர்காலத்தில் சமூகச் செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடியதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire