Paristamil Navigation Paristamil advert login

பரிஸ்: சவூதி அரேபிய மெய்க்காப்பாளரின் ஆடம்பரக் கடிகாரம் கொள்ளை!!

பரிஸ்: சவூதி அரேபிய  மெய்க்காப்பாளரின் ஆடம்பரக் கடிகாரம் கொள்ளை!!

25 ஆவணி 2026 செவ்வாய் 14:20 | பார்வைகள் : 226


ஆகஸ்ட் 23-ஆம் திகதி அதிகாலை சுமார் 2 மணியளவில் பரிஸ் 8, boulevard Haussmann தெருவில், சவூதி அரேபிய தூதரின் மெய்க்காப்பாளர், தெருவில் வைத்து ஒருவரால் மிரட்டப்பட்டு, அவரது விலையுயர்ந்த கைக்கடிகாரம் கொள்ளையடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, ஒரு நபர் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவரை அணுகினார். பின்னர் அந்த நபர் அவரது கழுத்தைப் பிடித்து, தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டியதாக பரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்பின் அவர் பாதிக்கப்பட்டவரின் விலையுயர்ந்த கடிகாரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. 

சம்பவத்தால் அதிர்ச்சியடைந்திருந்தாலும், பாதிக்கப்பட்டவர் கொள்ளையன் ஏறிச் சென்ற காரின் பதிவு எண்ணை கவனித்து வைத்திருந்தார். இந்த தகவல் விசாரணையில் முக்கிய ஆதாரமாக அமைந்தது. பின்னர் சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்; அவர் 1986-ல் பிறந்தவர் என்றும், இதற்கு முன்பு நீதித்துறை பதிவுகளில் அறியப்படாதவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர் தனது தொலைபேசியின் இருப்பிடத் தகவலை பயன்படுத்தி Yvelines பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆயுதம் காட்டி கொள்ளையடித்தது மற்றும் தடைசெய்யப்பட்ட வகை ஆயுதத்தை வைத்திருந்தது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தற்போது தொடர்கிறது. 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்