Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்க உதவும் AI

பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்க உதவும் AI

25 ஆவணி 2026 செவ்வாய் 14:56 | பார்வைகள் : 126


செயற்கை நுண்ணறிவு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்க உதவுக்கூடும் என அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

கணினிசார் பாதுகாப்பு ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவை வைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

கிரிம்சன் ஃப்ளேர் என்ற ஆய்வுக் குழு AI குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் off - the - shelf செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை பயன்படுத்தி, எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி செயல்படும் வகையில் எளிதாக மாற்றியமைக்க முடியும் என்று எச்சரிக்கின்றனர்.

'இந்த செயற்கை நுண்ணறிவு, அனுபவமற்ற தீய சக்திகளுக்கு வெடிபொருட்கள் அல்லது இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளை கற்றுக் கொடுக்க அனுமதிக்கிறது' என்று இந்த அறிக்கை கூறுகிறது.

அதாவது, அறிவியலில் அடிப்படை புரிதல் 'தீய சக்திகள்' என்று அழைக்கப்படுபவர்கள் கூட, ஆந்த்ராக்ஸ் போன்ற நம்பமுடியாத அளவிற்கு அபாயகரமான ஆயுதங்களை விரைவில் தங்களுக்கு ஆயுதபாணியாக்கிக் கொள்ள முடியும் என்கிறது.

மேலும், இந்த அறிக்கையானது Abliteration என்று முறைசாரா முறையில் அறியப்படும் ஒரு புதிய முறையைப் பற்றி எச்சரிக்கிறது.

இது பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை 'நிமிடங்களில் செயலிழக்க செய்ய' அனுமதிக்கிறது.

அதன் பின்னர் 'அழிக்கப்பட்ட' இந்த மாதிரிகளை பின் இணையத்தில் பதிவேற்றலாம். அங்கு யார் வேண்டுமானாலும் அவற்றை பதிவிறக்கம் செய்து, தங்கள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அத்துடன் OpenAI-யின் ChatGPT போன்ற chatbots, அதே அடிப்படை கட்டமைப்பைப் பயன்படுத்தும் அதே வேளையில், எவருடைய கணினியிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து இயக்கக்கூடிய open-weight வகை பெரிய மொழி மாதிரிகள் (LLMs) குறித்து இந்த அறிக்கை ஆராய்கிறது.  

 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்