Paristamil Navigation Paristamil advert login

மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

26 ஆவணி 2026 புதன் 06:20 | பார்வைகள் : 129


லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். எனவே, இரு தரப்பினர் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

முந்தைய தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேசுக்கு லஞ்சம் கொடுத்ததாக தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, மரிய வில்சன் மீதும், முன்னாள் கல்வி அமைச்சர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நபர் மீது மரிய வில்சன் அப்போதும் சரி, இப்போதும் சரி எந்தப் புகாரும் அளிக்கவில்லை. அப்படியிருக்க, இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் தெரிவித்து விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன?

குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி பெறும் வகையில், மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் இருந்தன? தனது தனிப்பட்ட நலனுக்காக லஞ்சம் கொடுத்து காரியத்தை முடித்துக்கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சனை முக்கியமான அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக செயல்படும்?

எனவே, ஒப்புதல்கள் அல்லது அனுமதிகளைப் பெறுவதற்காக அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8-ன் கீழும், ஊழல் செயலுக்கு துணை போனதாக பிரிவு 12-ன் கீழும், சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் வழங்கியதாக BNS பிரிவு 61-ன் கீழும் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக எவ்வித சமரசமும் இல்லாமல் முறையாக விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடியும் வரை மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் நீக்க வேண்டும்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்