இந்தியாவுக்கு உர விநியோகம்; ரஷ்ய அதிபர் புடின் உறுதி
26 ஆவணி 2026 புதன் 08:27 | பார்வைகள் : 135
இந்தியாவின் உரப் பிரச்னையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். வர்த்தகம் மற்றும் எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்” என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். தற்போது ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து, பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியை அவரிடம் வழங்கினார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுக்கான உர விநியோகத்தை தொடர்ந்து மேற்கொள்ள புதின் உறுதியளித்தார். மேலும், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா - ரஷ்யா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
ரஷ்ய அதிபர் புதின் செப்டம்பர் 12-ம் தேதி பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக இந்தியா வருவதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், புதினும் சந்திக்க உள்ளனர்.
புதின் கூறியது என்ன?
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது:
“வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்தும், உரங்கள் தொடர்பான பிரச்னை குறித்தும் கவனம் செலுத்தினோம். இந்திய விவசாயிகளுக்கும், நாட்டின் விவசாயத் துறைக்கும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யா தனது ஏற்றுமதியை விரிவுபடுத்தி வருகிறது. மேலும், அதை தொடர்ந்து மேற்கொள்ளவும் தயாராக உள்ளது. அணுசக்தி, உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரு நாடுகளின் உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறிய சரிவுக்குப் பிறகு, வர்த்தகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
ரஷ்யா - இந்தியா உறவுகளின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணிப்பதில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்கான பெருமை பெரும்பாலும் அவரையே சேரும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.”
இவ்வாறு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire