Paristamil Navigation Paristamil advert login

தாய்மாமன் தங்க மோதிரம்: 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம்

தாய்மாமன் தங்க மோதிரம்: 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம்

26 ஆவணி 2026 புதன் 09:29 | பார்வைகள் : 143


‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் தங்க மோதிரங்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 107 மையங்களில் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

“அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் ஆண்டுதோறும் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தயாரிக்கப்படும் தங்க மோதிரங்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க மாநிலம் முழுவதும் 107 மையங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், செப்டம்பர் 5-ம் தேதிக்கு முன்பாகவே பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித் துறையை சுகாதாரத் துறைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நவீன பாதுகாப்பு வசதிகள்

தங்க மோதிரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எஃகு அலமாரிகளைச் சுற்றி எஃகு கம்பி வலை அமைப்புகள், தரை மற்றும் சுவருடன் உறுதியாகப் பொருத்தப்பட்ட அலமாரிகள், பூட்டக்கூடிய கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்படுகின்றன.

இதற்கான பணிகள் தொழில்நுட்ப வசதிகளுடன் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும், மூன்று பக்கங்களிலும் கட்டிடங்களால் சூழப்பட்ட பாதுகாப்பான சேமிப்பு அறை, மூடப்பட்ட ஜன்னல்கள் மற்றும் சிமெண்ட், கான்கிரீட் மூலம் தரை மற்றும் சுவருடன் உறுதியாகப் பொருத்தப்பட்ட அலமாரிகள் அமைக்கப்பட உள்ளன. அலமாரியின் மேற்பகுதி மற்றும் இருபுறங்களும் மூடப்பட்டிருக்கும்.

அலமாரியின் முன்புறத்தில் திறக்கக்கூடிய வகையில் ‘மைல்ட் ஸ்டீல்’ கம்பி வலைக் கதவு அமைக்கப்படும்.

தங்க மோதிரங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இத்திட்டத்தை எந்தவித தடையும் இல்லாமல் செயல்படுத்தும் வகையில், பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு விரைவாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

107 மையங்களில் இருந்து மோதிரங்கள் விநியோகம்

சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அனைத்து மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 107 மையங்களில் இருந்து அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு பச்சிளம் குழந்தைக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்