இளம் தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்: நிதின் கட்கரி
26 ஆவணி 2026 புதன் 12:42 | பார்வைகள் : 119
என்னால் முன்பு போல அதிகமாக வேலை செய்ய முடியவில்லை. பொறுப்புகளை இளம் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது” என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, 69, தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
“இப்போது என்னால் முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. என்னால் முடிந்த காலத்தில் கடுமையாக உழைத்தேன். தற்போது எனது ஈடுபாடு குறைந்துள்ளது. எனவே, பொறுப்புகளை இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இளம் தலைமுறையினருக்கு நாம் வழிகாட்ட வேண்டும். பொது வாழ்க்கையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த காலகட்டத்தில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளேன்; பல விருதுகளையும் பெற்றுள்ளேன். ஆனால் தற்போது என்னால் அதிகமாக பணியாற்ற முடியவில்லை.
இளம் தலைமுறையினர் செயல்படுவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். மகாராஷ்டிராவில் மின்சார வசதி இல்லாத பழங்குடியின கிராமம் எதுவும் இருக்கக்கூடாது. மாநிலம் முழுவதும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதே எனது நோக்கம்.”
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.
ஓய்வு பெறுகிறாரா நிதின் கட்கரி?
அமைச்சர் நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் நடைபெற்றன.
இதுகுறித்து விளக்கம் அளித்த நிதின் கட்கரியின் அலுவலகம், “நிதின் கட்கரியின் கருத்துக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனது அறக்கட்டளைப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றே அவர் கூறினார்.
அந்தப் பணிகளை இளம் தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டார்” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபின் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றது முதல், கட்சியில் இளம் தலைமுறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கட்சியின் தேசிய அளவில் நியமிக்கப்பட்ட 76 நிர்வாகிகளின் சராசரி வயது 55 ஆகும். இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire