விமானிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை போதை பரிசோதனை: மத்திய அரசு
26 ஆவணி 2026 புதன் 13:46 | பார்வைகள் : 115
நம் நாட்டில் பயணியர் விமானங்களை இயக்கும் அனைத்து விமானிகளுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை போதைப் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் செய்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்” என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கட்டில் இருந்து டெல்லி நோக்கி கடந்த 4-ம் தேதி வந்த ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் பயணியர் விமானம், நடுவானில் 300 அடி கீழே இறங்கியது. இந்தச் சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், விமானிகள் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு விமானிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், விமானிகளுக்கான போதைப் பரிசோதனை நடைமுறைகளை மேலும் தீவிரப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியது
இதுகுறித்து விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது:
“தற்போதைய விதிமுறைகளின்படி, மொத்த விமானிகளில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே போதைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இனி ஒவ்வொரு விமானிக்கும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது, எதிர்பாராத நேரத்தில் போதைப் பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள விதிமுறைகளை மேலும் எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்துடன் இணைந்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
போர்தோவை, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire