டிஜிட்டல் பயணத்தில் திருப்புமுனை: பிரதமர் பெருமிதம்
26 ஆவணி 2026 புதன் 14:47 | பார்வைகள் : 112
யு.பி.ஐ. எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை தளம் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், “இது நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனை” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ், என்.பி.சி.ஐ. எனப்படும் ‘நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ சார்பில், 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி யு.பி.ஐ. சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் முதுகெலும்பாக விளங்கும் யு.பி.ஐ., நிதி சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய உந்துசக்தியாகவும் செயல்பட்டு வருகிறது.
யு.பி.ஐ. சேவை அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“யு.பி.ஐ. சேவை 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இது நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
யு.பி.ஐ.யின் பிரமாண்ட வளர்ச்சியை கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது யு.பி.ஐ. அனுபவங்களையும், அது தங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூலை முடுக்குகள் வரை யு.பி.ஐ. சேவை விரிவடைந்துள்ளது என்றே கூறலாம். டீக்கடை முதல் ஆட்டோ பயணம் வரை தற்போது பொதுமக்கள் ‘கூகுள் பே’, ‘போன்பே’ உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தி யு.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
சொல்லப்போனால், யு.பி.ஐ. இல்லாத இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தாதவர்களும் இல்லை என்ற அளவுக்கு அதன் பயன்பாடு பரவலாகியுள்ளது.
‘ராகுலை விட புத்திசாலி!’
யு.பி.ஐ. சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது, “தெருவோர வியாபாரிகள் மற்றும் கிராமப்புற மக்களால் இந்த சேவையை பயன்படுத்த முடியாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறினார். பானிபூரி விற்பவர்களையும் அவர் கேலி செய்தார்.
தற்போது சிதம்பரத்துக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் யு.பி.ஐ. சேவை உள்ளது. காய்கறி விற்பவர், பானிபூரி விற்பவர் ராகுலை விட புத்திசாலிகள். அவர்களிடம் இருந்து ராகுல் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
போர்தோவை, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire