Paristamil Navigation Paristamil advert login

மிதிவண்டி ஓட்டுநருக்கு கத்திக்குத்து – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

மிதிவண்டி ஓட்டுநருக்கு கத்திக்குத்து – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

26 ஆவணி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 311


தலைநகர் Paris-இன் 9ஆம் வட்டாரத்தில் சாலைப் போக்குவரத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் மகிழுந்து ஓட்டுநரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.20 மணியளவில் rue de Sèze பகுதியில், église de la Madeleine தேவாலயத்திற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தகராறுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவத்துக்குப் பின்னர் மகிழுந்தில் இருந்த நபர் அங்கிருந்து செல்ல முயன்றதாகவும், மிதிவண்டி ஓட்டுநர் அவரைத் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மகிழுந்தில் இருந்தவர் கத்தியால் மிதிவண்டி ஓட்டுநரை குத்திவிட்டு, உடனடியாக மகிழுந்தில் தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த மிதிவண்டி ஓட்டுநர் அவசர மருத்துவ உதவிக் குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். தப்பிச் சென்ற மகிழுந்து ஓட்டுநரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம், 2024ஆம் ஆண்டு Paris-இல் சாலைத் தகராறைத் தொடர்ந்து மிதிவண்டி ஓட்டுநர் Paul Varry கொல்லப்பட்ட சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்துவது குறிப்பிடத்தக்கது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்