‘காந்தாரி’ பட கதை இதுவா?

‘காந்தாரி’ பட கதை  இதுவா?

26 ஆவணி 2026 புதன் 14:09 | பார்வைகள் : 326


டாப்ஸி பன்னு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘காந்தாரி’. கனிகா தில்லான் எழுத்தில் தேவாஷிஷ் மகிஜா இயக்கியுள்ள இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்னிந்திய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான டாப்ஸி, ‘ஆடுகளம்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், நடிப்புடன் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அனுராக் கஷ்யப் இயக்கிய ‘டோபாரா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள டாப்ஸியின் சமீபத்திய ‘ஆசி’ திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தது.

‘காந்தாரி’ திரைப்படத்தில் விஷ்வக் சிங், சாயா கடம், ஸ்வஸ்திகா முகர்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரயில் நிலையத்தில் தனது குழந்தையைப் பிரிந்த தாய், அவளை மீட்டெடுக்க மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைக் கடத்தலை பின்னணியாக கொண்டிருக்கும் இப்படத்தின் டிரெய்லர், தாயின் பாசத்தையும் பரபரப்பான சம்பவங்களையும் முன்னிறுத்தி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

தொடர்ந்து படிக்க