நேபாளத்தில் திடீர் வெள்ளம் - சுற்றுலா சென்ற 57 தமிழர்களின் அவல நிலை
26 ஆவணி 2026 புதன் 15:11 | பார்வைகள் : 165
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர்.
நேபாளத்தின் கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.
வெள்ளத்தில் பாலங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்படுவதும், வீடுகள் மூழ்கடிக்கப்படும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்திற்கு சென்றுள்ள 100க்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 57 பேர் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் 3 பேருந்துகளில் பயணித்துள்ள நிலையில், ஒரு வாகனத்தில் பயணித்த 20 பேர் வெள்ளத்தில் சிக்காமல் அங்குள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர்.
மீதமுள்ள 2 வாகனங்களில் சென்ற 37 தமிழர்களின் நிலை குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.
வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை இந்தியா தூதரகம் மூலம் நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
போர்தோவை, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire