இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் - சீறிப்பாய்ந்த 162 ட்ரோன்கள்
26 ஆவணி 2026 புதன் 15:59 | பார்வைகள் : 147
உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.
புதன்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய படைகள் இரவோடு இரவாக மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
கிட்டத்தட்ட 162 ஆளில்லா விமானங்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு முனைகளில் இருந்து முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் ஆயுதங்கள் மற்றும் திசைதிருப்பும் ஏமாற்று அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைனிய பாதுகாப்பு படை டெலிகிராமில் வெளியிட்ட தகவலில், ரஷ்யா ஷாஹெட் ரக ட்ரோன்கள், கெர்பர் ரக ஏமாற்று ட்ரோன்கள், பரோடி ரக ட்ரோன்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வான்வழித் தாக்குதல் ஆயுதங்கள் குர்ஸ்க், ஓரியல், பிரிமோர்ஸ்கோ - அக்தர்ஸ்க், ஹவார்திட்ஸ்கே மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பல்வேறு இடங்களில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
ரஷ்யா ஏவிய 162 ட்ரோன்களில் 134 ட்ரோன்களை உக்ரைனிய பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
இடைமறிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிய ட்ரோன்கள் 18 வெவ்வேறு இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
போர்தோவை, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire