Paristamil Navigation Paristamil advert login

நேட்டோ உபகரணங்கள் போல் மாறுவேடமிட்ட மூன்று ஏவுகணைகளுடன் இத்தாலியில் ஒரு பிரெஞ்சுக்காரர் கைது!!

நேட்டோ உபகரணங்கள் போல் மாறுவேடமிட்ட மூன்று ஏவுகணைகளுடன் இத்தாலியில் ஒரு பிரெஞ்சுக்காரர் கைது!!

26 ஆவணி 2026 புதன் 21:00 | பார்வைகள் : 140


இத்தாலியின் தெற்குப் பகுதியிலுள்ள Bari துறைமுகத்தில், கிரேக்கத்தின் பாத்ராஸ் நகரிலிருந்து வந்த கப்பலில் பயணம் செய்த ஒரு பிரெஞ்சு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வாகனத்தில் மூன்று டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

46 வயதான Régis Normandஎன்ற அந்த நபர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது விசாரணை முடிவடையும் வரை அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கின் விவரங்கள் இவ்வாரம்தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.  

அவரது வாகனத்தை சோதனையிட்ட காவல்துறையினர், ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளரான MBDA உருவாக்கிய மூன்று ஏக்கெரான் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளையும், வெடிபொருள் இல்லாத ஒரு பயிற்சி ஏவுகணையையும் கண்டுபிடித்தனர். உண்மையான ஏவுகணைகளில் உள்ள அதிக வெடிப்புச் சக்தியுள்ள போர்முனையை குறிக்கும் மஞ்சள் மற்றும் கருப்பு அடையாளங்கள் நீல ஒட்டும் நாடாவால் மறைக்கப்பட்டிருந்தன. இதனால் அவை நேட்டோ பயிற்சி உபகரணங்களைப் போல காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

தான் இந்த ஆயுதங்களை MBDA France நிறுவனத்தின் சார்பில் எடுத்துச் சென்றதாக அந்த நபர் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார். கிரீஸில் பழுதுபார்க்கப்பட்ட ஏவுகணைகளை உற்பத்தியாளரிடம் திரும்பக் கொண்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், தொடர்புடைய ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதால் விசாரணை தொடர இத்தாலிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்