செப்.,01 ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்
27 ஆவணி 2026 வியாழன் 10:15 | பார்வைகள் : 127
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகா தண்ணீர் திறக்காததாலும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.
இதன் காரணமாக, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசிடம் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.84 அடியாகவும், நீர் இருப்பு 51.33 டி.எம்.சி.,யாகவும் உள்ளது.
இதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டது. சட்டசபையில் அமைச்சர் ஆனந்த், ''விரைவில் நல்ல செய்தி வரும்'' என தெரிவித்தார். அமைச்சர் செங்கோட்டையன், ''இன்னும் தேதி முடிவு செய்யவில்லை'' என கூறியிருந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். அன்றிலிருந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் தொடர்ந்து வரும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். காவிரி படுகையில் போதிய மழை இல்லாத நிலையிலும், பாசன தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை மேட்டூர் அணையின் வலது கரையில் தண்ணீர் திறக்கப்பட உள்ள இடத்தை சேலம் மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, சேலம் டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹதிமனி மற்றும் எஸ்.பி., குத்தாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அணை பொறியாளரிடம் ஆலோசனை நடத்தினர்.
### தண்ணீர் போதுமா?
குறுவை பயிர் சாகுபடிக்கு குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். இதற்கு அணையில் குறைந்தபட்சம் 60 டி.எம்.சி., தண்ணீர் இருக்க வேண்டும்.
தற்போது அணையில் உள்ள நீர் குறுவை சாகுபடிக்கு போதுமானதாக இல்லை. இருப்பினும், வரும் நாட்களில் மழை பெய்யும் அல்லது கர்நாடகா தண்ணீர் திறக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire