Paristamil Navigation Paristamil advert login

நேபாள வெள்ளப்பெருக்கு: உத்தரபிரதேசம், பீகாரில் உஷார் நிலை

நேபாள வெள்ளப்பெருக்கு: உத்தரபிரதேசம், பீகாரில் உஷார் நிலை

27 ஆவணி 2026 வியாழன் 12:26 | பார்வைகள் : 136


நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, இந்திய எல்லையில் இருந்து சுமார் 160 கி.மீ., தொலைவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள திரிசூலி நதியில் ஏற்பட்டுள்ள இந்த பெருவெள்ளம், இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் வழியாக பாயும் கண்டக் ஆற்றிலும் கரைபுரண்டு ஓடும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, நேபாளத்தை ஒட்டிய உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் கடும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டக் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரு மாநிலங்களிலும் ஏற்படக்கூடிய எந்தவிதமான பேரிடரையும் எதிர்கொள்ளும் வகையில், 20 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக கூடுதல் மீட்புக்குழுக்களும் தயாராக உள்ளன.

வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்