Paristamil Navigation Paristamil advert login

பாஜவுடன் சமரசம் செய்யும் கட்டாயத்தில் திமுக! அமைச்சர் அருண்ராஜ்

பாஜவுடன் சமரசம் செய்யும் கட்டாயத்தில் திமுக! அமைச்சர் அருண்ராஜ்

27 ஆவணி 2026 வியாழன் 13:30 | பார்வைகள் : 125


சட்டசபையில் எதிர்க்கட்சியான திமுக ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தால், தாங்களும் அதற்கு ஏற்ப பேசுவோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செயல்பட்டு வருவதைப் போல, மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'கீமோதெரபி' மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும்.

சட்டசபையில் எதிர்க்கட்சியான திமுக ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசினால், நாங்களும் பேசுவோம். ஆனால், கடந்த கால ஆட்சி மற்றும் அவர்களது தலைவர்களை பற்றி பேசுவதற்குத்தான் அவர்களுக்கு போதுமான நேரம் உள்ளது. அவர்கள் எந்த விவகாரம் குறித்து பேசினாலும், அதற்கு பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

புதிய விமான நிலையம் அமைய உள்ள இடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

கடந்த திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியபோது, அப்போதைய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தற்போது தூய்மை பணியாளர்கள் பிரச்னைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்படும்.

பா.ஜ.,வை உறுதியாக எதிர்க்கும் கட்சியாக தவெக உள்ளது. ஆனால், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருப்பதால், அவர்கள் பா.ஜ.,வுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்