திபெத் மண்சரிவில் மாயமானவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்வு
27 ஆவணி 2026 வியாழன் 06:46 | பார்வைகள் : 226
திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் அரச ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் 260 பேர் வெளிநாட்டவர்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கைராங் எல்லையானது சீனா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய எல்லைக் கடக்கும் இடமாக உள்ளது.
இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் எல்லையில் மண்சரிவு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே, பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
நேபாளத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களில் 341 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.
அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் எந்த நாடுகள் என உறுதிப்படுத்தப்படாத 100 பேரும் அடங்குவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire