Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 162 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 162 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

27 ஆவணி 2026 வியாழன் 09:50 | பார்வைகள் : 147


நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போனவர்களில் 28 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் திடீரென நேற்று வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதன்காரணமாக அந்த பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

அதேநேரம் வெள்ளத்தால் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனர்த்தம் காரணமாக வீடுகள், பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

எழுத்துரு விளம்பரங்கள்