Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் பெருவெள்ளம்: சுமார் 80 பிரெஞ்சு குடிமக்கள் சிக்கி தவிப்பு!!

நேபாளத்தில் பெருவெள்ளம்: சுமார் 80 பிரெஞ்சு குடிமக்கள் சிக்கி தவிப்பு!!

27 ஆவணி 2026 வியாழன் 07:39 | பார்வைகள் : 351


நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தற்போது நேபாளத்தில் குறைந்தது 80 பிரெஞ்சு குடிமக்கள் இருப்பதாக Ariane தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பதிவு செய்யாத பிற பிரெஞ்சு பயணிகளும் இருக்கக்கூடும்.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகமும், நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகங்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளன. அவர்கள் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உதவி செய்து வருகின்றனர்.

பிரெஞ்சு அதிகாரிகள், நேபாளத்தில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்களுடன் பிரான்ஸ் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்