ஹோர்முஸ் நீரிணை முடக்கம் - தற்காலிக கடற்பாதைக்கு ஈரான் அதிரடி திட்டம்
27 ஆவணி 2026 வியாழன் 14:49 | பார்வைகள் : 127
அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
இதன் மூலம் கப்பல் போக்குவரத்திற்கான தற்காலிகப் பாதையொன்றை விரைவில் அறிவிக்க முடியும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து உருவான போர் சூழல் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுப் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாக நடைபெறுவதால், அதன் தொடர்ச்சியான முடக்கம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பான கடற்பயணத்தை மீளமைக்கும் நோக்கில் கூட்டுத் தற்காலிக கடற்பாதையொன்றை அமைப்பது தொடர்பாக ஈரானும் ஓமானும் உடன்பாடு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பிலும் இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஈரான் மீது தற்போதைக்கு புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திட்டம் அமெரிக்காவிடம் இல்லை எனவும், அதற்கு பதிலாக பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா முயன்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஈரானால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பயணிப்பது தொடர்ந்தும் ஆபத்து நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
இந்த நிலைமையில், ஈரான்–ஓமான் பேச்சுவார்த்தையின் முடிவாக அறிவிக்கப்படவுள்ள தற்காலிக கடற்பாதை, சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலக எரிசக்திச் சந்தையின் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire