Paristamil Navigation Paristamil advert login

நோர்வே மன்னரின் உடல்நிலை கவலைக்கிடம்

நோர்வே மன்னரின் உடல்நிலை கவலைக்கிடம்

27 ஆவணி 2026 வியாழன் 15:50 | பார்வைகள் : 123


நோர்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.

மன்னர் ஹரால்ட்டின் இரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் நோர்வே அரச மாளிகை இன்று 27.08.2026 அறிவித்துள்ளது.

89 வயதான மன்னர் ஐந்தாம் ஹரால்ட், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் நோர்வே நாட்டின் மன்னராக பதவி வகித்து வருகிறார்.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள அவர், கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதன் தொடர்ச்சியாக, ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மன்னர் ஹரால்ட், சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.

தொடர்ச்சியாக உடல்நலக் குறைவு காரணமாக மன்னர் ஹரால்ட் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவரது மகனும் நோர்வே நாட்டின் பட்டத்து இளவரசருமான ஹாக்கோன் அரசுப் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருகிறார்.  

 

 

எழுத்துரு விளம்பரங்கள்