இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள்

இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள்

27 ஆவணி 2026 வியாழன் 15:19 | பார்வைகள் : 292


அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய U19 அணியில் முன்னாள் வீரர்கள் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இடம்பிடித்துள்ளார்.

கடைசியாக 2012 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்கள் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் இணைந்து விளையாடினர்.

தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு அதே அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.

வரும் செப்டம்பர் மாதத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அவுஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு வருகை தந்து 3 ஒருநாள் மற்றும் 2 பலநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதற்கான இந்திய U19 அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிக்கான அணியில் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட் மற்றும் சேவாக்கின் மூத்த மகனான ஆர்யவிர் சேவாக் இடம் பிடித்துள்ளனர்.  

17 வயதான அன்வே டிராவிட் முன்னதாக கடந்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய U 19 அணியில் இடம்பெற்றிருந்தார். விக்கெட் கீப்பரான இவர் அந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி, 14 மற்றும் 87 ஓட்டங்கள் எடுத்தார்.

டெல்லி பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் 18 வயதான ஆர்யாவீர் இந்திய அணியில் இடம் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

 

தொடர்ந்து படிக்க