Paristamil Navigation Paristamil advert login

தென் கொரியாவுக்கு ஆயுதம் உதவி வழங்கிய அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

தென் கொரியாவுக்கு  ஆயுதம் உதவி வழங்கிய அமெரிக்காவை  எச்சரிக்கும் வடகொரியா

27 ஆவணி 2026 வியாழன் 19:27 | பார்வைகள் : 126


தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வதை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது.

தென் கொரியாவிற்கு ஆயுத விற்பனை தொடர்பில் புதிதாக ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தங்கள் நாட்டிற்கு எதிரான நேரடி விரோதப் போக்கு என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

வட கொரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த செயலுக்கு வட கொரியா வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் நிலைமை மோசமானதாக அமைந்தால் உடனடியாகவும், சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

125 மில்லியன் டொலர் ராணுவ தளவாடங்களுக்கான ஒப்புதலை தென் கொரியாவிற்கு அமெரிக்கா அளித்ததை அடுத்து இந்த இராஜதந்திர மோதல் ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 103 'AIM-9X Sidewinder Block II' ஆகிய ஏவுகணைகளும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்