Paristamil Navigation Paristamil advert login

உற்பத்தி, ஏற்றுமதி மையமாகும் இந்தியா: நிர்மலா சீதாராமன்

உற்பத்தி, ஏற்றுமதி மையமாகும் இந்தியா:  நிர்மலா சீதாராமன்

28 ஆவணி 2026 வெள்ளி 07:22 | பார்வைகள் : 151


உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சேவைகளுக்கான சர்வதேச மையமாக இந்தியா வேகமாக உருவெடுத்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கனடா சென்றுள்ள நிர்மலா சீதாராமன், டொரோன்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

“இந்தியா வளர்ந்து வரும் சந்தையாக மட்டுமல்லாமல், சர்வதேச உற்பத்தி, புதுமை, சேவை மற்றும் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாகவும் மாறி வருகிறது. சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயமாக்கல், உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மற்றும் கொள்கை ஆதரவு ஆகியவை நீண்ட கால முதலீடுகளுக்கான சூழலை வலுப்படுத்தி வருகின்றன.

கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், இந்தியாவை வெறும் முதலீட்டுக்கான இடமாக மட்டும் கருதாமல், சர்வதேச வளர்ச்சிக்கான கூட்டாளியாகவும் பார்க்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் நீண்ட கால செயல்பாடுகளையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்த வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்