Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் சிக்கிய தமிழக ஆன்மிக பயணிகள்: 148 பேர் பத்திரம்

நேபாளத்தில் சிக்கிய தமிழக ஆன்மிக பயணிகள்: 148 பேர் பத்திரம்

28 ஆவணி 2026 வெள்ளி 08:28 | பார்வைகள் : 204



தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற குழுவைச் சேர்ந்த 148 பேரும் சாகா என்ற பகுதியில் பத்திரமாக இருப்பதாக, அந்த குழுவில் இடம்பெற்றுள்ள தேச மங்கையர்கரசி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

“மானசரோவர் யாத்திரை செல்லும் வழியில் சாகா பகுதியில் உள்ளோம். இங்கு போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. நேபாளம், சீனா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் நாடு திரும்புவதற்கு உதவி கேட்டுள்ளோம்.

அரசு ஒத்துழைப்பு வழங்கி, பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம். தாயகம் அனைவரும் விரைவாக திரும்ப வேண்டும்.

எல்லாம் வல்ல சிவபெருமான் எங்களுக்கு துணை நிற்பார் என்ற நம்பிக்கையோடு இதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்