Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்பு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்பு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்

28 ஆவணி 2026 வெள்ளி 09:33 | பார்வைகள் : 187


நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்களின் விவரங்களையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:

நேபாளத்தில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மானசரோவர் யாத்திரைக்காக சென்று சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களையும் பெற்றுள்ளோம்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என சுமார் 200 இந்தியர்கள் உதவி கோரியுள்ளனர். அவர்களில் 95 பேர் திபெத்தின் கார்சான் பகுதியில் உள்ளனர். அவர்கள் நேபாளத்தை கடப்பதற்காக பில்சா பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மேலும், 13 பேர் திபெத்தின் ஜூடுல்போ நகரில் உள்ளனர். அவர்கள் சஹா நகரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

மீட்கப்பட்ட தமிழர்களின் விவரம்
தியாகராஜன் (சிதம்பரம்)
கிருபாகிரி (சிதம்பரம்)
கனகசபை (பெங்களூரு)
ராதை (பெங்களூரு)
ரகுநாதன் (ஓசூர்)
மணிமேகலை (மயிலாடுதுறை)
பழனியப்பன் (சிதம்பரம்)
கலைமதி (சிதம்பரம்)
ரத்தினகுமார் (மயிலாடுதுறை)
பூங்குழலி (மயிலாடுதுறை)
வள்ளிநாயகி (திருச்சி)
முத்துக்குமரேசன் (சிதம்பரம்)
மைதிலி (சென்னை)
நாவு கபீர்தாஸ் (சென்னை)
விஜயபுவனேஸ்வரி (சிதம்பரம்)
சிவரஞ்சனி (திருச்சி)
சாந்தி (சிதம்பரம்)
கற்பகம் (திருச்சி)
மாறன் (சிதம்பரம்)
திருமாவளவன் (நெய்வேலி)
சத்தியா (காஞ்சிபுரம்)

மேற்கண்ட 21 பேரும் நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

288 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை

ரந்தீர் ஜெயிஸ்வால் மேலும் கூறியதாவது:

இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்கள் காத்மாண்டுவை சென்றடைந்துள்ளன. இதில் 8 டன் மருந்துப் பொருட்கள் மற்றும் ஒரு டன் உணவுப் பொருட்கள் அடங்கும். நேபாளத்தில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா மொத்தம் 47.5 டன் அவசரகால உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.

நேபாள பிரதமரை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்ததுடன், நேபாள மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இதுவரை 288 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. அவர்களில் 73 பேர் திரிசுலி மின் திட்டத்தில் பணியாற்றுபவர்கள். காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக திட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களின் விவரங்களை அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திரிசுலி மின் திட்டத்தில் பணியாற்றும் 73 பேரைத் தவிர, சாம்ராட் மற்றும் ப்ளை எவரெஸ்ட் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த 37 பேர் மற்றும் 49 பேர் கொண்ட இரண்டு குழுக்களும் சிக்கியுள்ளன.

ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரேவுக்கு சாம்ராட் டிராவல்ஸ் உதவியுடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 இந்தியர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 61 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 பேர் கொண்ட குழு என மொத்தம் ஐந்து குழுக்களில் 288 பேர் நேபாளத்தில் சிக்கியுள்ளனர்.

இவ்வாறு ரந்தீர் ஜெயிஸ்வால் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்