Paristamil Navigation Paristamil advert login

போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பதில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி

போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பதில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி

28 ஆவணி 2026 வெள்ளி 12:43 | பார்வைகள் : 105


போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பதிலும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதிலும் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேலோ இந்தியா மாநாட்டில் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களிடம் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட வேண்டுமெனில், பல்வேறு விளையாட்டுகளில் வீரர்கள் பங்கேற்க வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பதிலும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதிலும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

விளையாட்டு களத்திற்குள் செல்லாமல் ஒரு வீரர் மன உறுதியை கற்றுக்கொள்வது மிகவும் கடினம். விளையாட்டுகள் நம்மை வெற்றியாளர்களாக உருவாக்குவது மட்டுமின்றி, சிறந்த போட்டியாளர்களாக எப்படி மாற வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றன. வீழ்வதும், மீண்டும் எழுவதும் விளையாட்டு நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

21-ம் நூற்றாண்டில் இந்தியாவில் நவீன விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அரசு உறுதிபூண்டுள்ளது. விளையாட்டு பல்கலைக்கழகங்கள் முதல் நவீன பயிற்சி மையங்கள் வரை, வீரர்களின் திறமைகளை கண்டறிந்து, உலகளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

கேலோ இந்தியா சம்வாத் என்பது விளையாட்டுக்கான தளம் மட்டுமல்ல. இளைஞர்களின் சிந்தனைகள், யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை உருவாக்குவதற்கான முக்கியமான மேடையாகவும் இது விளங்குகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்