Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

28 ஆவணி 2026 வெள்ளி 07:52 | பார்வைகள் : 207


நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 389 ஆக உயர்ந்துள்ளது

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் பொலிஸ் படை மற்றும் தேசிய பொலிஸைச் சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்