Paristamil Navigation Paristamil advert login

நேபாள பெருவெள்ளம்: 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாயம்

நேபாள பெருவெள்ளம்: 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாயம்

29 ஆவணி 2026 சனி 09:44 | பார்வைகள் : 138


நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, மொத்தம் 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாயமாகியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 290 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது. இந்த வெள்ளத்தில் இந்தியர்கள் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்படாதவர்களின் பட்டியலில் 33 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பெருவெள்ளத்தில் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், எத்தனை பேர் மாயமாகியுள்ளனர், எத்தனை பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், இந்தியாவைச் சேர்ந்த 290 பேர் காணாமல் போயுள்ளோர் மற்றும் இதுவரை கண்டுபிடிக்க முடியாதோர் பட்டியலில் உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் மாயமாகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 56 பேரின் நிலை குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

உக்ரைனைச் சேர்ந்த 53 பேர், மலேசியாவைச் சேர்ந்த 51 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 35 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 33 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த 25 பேர் எங்கு உள்ளனர் என்பது குறித்த விவரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும், நேபாளத்திற்கு சுற்றுலா வந்த கொரியா, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, லாத்வியா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், ஐரிஷ், கஜகிஸ்தான் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் நிலை குறித்தும் இதுவரை தகவல் கிடைக்கவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்