5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு
29 ஆவணி 2026 சனி 11:55 | பார்வைகள் : 111
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல், கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி ஜெயகுமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது எனக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 8-ம் தேதி வரை இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், தேர்தல் கமிஷன், மத்திய அரசு, சட்டசபை செயலர், முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விஜய் தரப்பு பதில் மனு
இந்நிலையில், இந்த வழக்கில் முதல்வர் விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்துடன், அடிப்படை உரிமையின்றி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அந்த தொகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் எம்எல்ஏ இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வாய்ப்பில்லை.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். எனவே, மனுதாரர் வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire