Paristamil Navigation Paristamil advert login

இன்று தேர்தல் நடந்தால் தேஜ கூட்டணிக்கு 326 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்

இன்று தேர்தல் நடந்தால் தேஜ கூட்டணிக்கு 326 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்

29 ஆவணி 2026 சனி 12:00 | பார்வைகள் : 204


இன்று மக்களவை தேர்தல் நடைபெற்றால், தேஜ கூட்டணி 326 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து ஆகஸ்ட் 2026-ல் நடத்திய ‘மூட் ஆப் தி நேஷன்’ என்ற தேசிய அளவிலான புதிய கருத்துக்கணிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை மொத்தம் 25,184 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாஜ தனித்து 261 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இது 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜ பெற்ற 240 இடங்களை விட அதிகமாகும்.

அதேபோல், காங்கிரஸ் கட்சி 106 இடங்களை கைப்பற்றக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2026-ல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புடன் ஒப்பிடும்போது, தற்போதைய சூழலில் தேஜ கூட்டணியின் பலம் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேஜ கூட்டணியின் வாக்கு சதவீதம் தற்போது 45.1 சதவீதமாக உள்ள நிலையில், அதிலும் சிறிதளவு சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்