கடன் நெருக்கடியில் சிக்கிய பிரான்ஸ்… A+ மதிப்பீட்டை தக்க வைத்த Fitch நிறுவனம்!!
29 ஆவணி 2026 சனி 07:30 | பார்வைகள் : 248
பிரான்ஸின் அரசுக் கடன் தொடர்பான மதிப்பீட்டை A+ ஆகவே தொடர்வதாக அமெரிக்க கடன் மதிப்பீட்டு நிறுவனமான Fitch Ratings அறிவித்துள்ளது. அத்துடன், பிரான்ஸின் கடன் மதிப்பீட்டுக்கான எதிர்கால நிலைப்பாடும் “நிலையானது” (Stable) எனத் தொடரும் என்று தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் தொடர்பான விவாதங்கள் தொடங்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரான்ஸின் பொருளாதாரம் மற்றும் அதன் நிறுவனங்களின் வலிமையை Fitch முன்னர் பாராட்டியிருந்தாலும், அதிகரித்துள்ள அரசுக் கடன் மற்றும் அரசியல் சூழல் காரணமாக அரச நிதியை சீரமைப்பதில் உள்ள சிரமங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், பிரான்ஸின் பொருளாதார நிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படவில்லை. 2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு 0.9 சதவீதத்திலிருந்து 0.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் ஆண்டுக்கு 2.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், அரசின் கடன் பெறும் வட்டி விகிதங்கள் சுமார் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், அரசுக் கடனை நிர்வகிக்கும் செலவும் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பிரான்ஸின் கடன் மதிப்பீட்டை குறைப்பதற்கான காரணங்கள் Fitch நிறுவனத்திடம் இருந்ததாக பொருளாதார நிபுணர் Éric Dor தெரிவித்துள்ளார்.
எனினும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட விவாதங்களின் முடிவைக் காண Fitch காத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில் பிரதமர் Sébastien Lecornu அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய கடினமான சூழலை எதிர்கொள்கிறார். இதனிடையே, மார்ச் மாத இறுதியில் பிரான்ஸின் அரசுக் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 117.5% ஆக இருந்ததாக Insee தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire