Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய இந்தியர்கள் - தீவிரமாகும் மீட்பு பணி

நேபாளத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய இந்தியர்கள் - தீவிரமாகும் மீட்பு பணி

29 ஆவணி 2026 சனி 06:56 | பார்வைகள் : 230


நேபாளத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக  மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள், நீர்மின் நிலையம் உள்ளிட்டவைகளில் பணியாற்றியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமான நிலையில் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமான நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சிலரின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில நீர்மின் நிலைய சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் 450-க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக தெரியவந்தது.

இந்த சுரங்கமும் வெள்ளத்தால் கடுமையாக பாதித்தது. இந்த பகுதியை ராணுவம் இன்ற வானி வழியாக சென்றடைந்தது.

பின்னர், சுரங்கத்திற்குள் நுழைத்து அங்கு தவித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

இதில் 63 இந்தியர்கள் உள்பட 350 பேரை நேபாள ராணுவம் மீட்டுள்ளது. இன்னும் சுமார் 100 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்