வெனிசுலாவுடன் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் – டிரம்ப் அறிவிப்பு
29 ஆவணி 2026 சனி 12:25 | பார்வைகள் : 131
வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள சுமார் 6500 கோடி பீப்பாய் உறுதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதியை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் கீழ் வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக அந்நாட்டின் எண்ணெய்த் துறையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு ஈர்க்கப்படும் என வெனிசுலா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த முதலீடுகளின் மூலம் வெனிசுலா அரசாங்கத்திற்கு 209 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நிறுவனங்களும் வெனிசுலா அரசாங்கமும் இணைந்து உருவாக்கவுள்ள புதிய தனியார் நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தியில் 55 சதவீதத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான உரிமையும் நீண்டகால அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய மசகு எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடுகளில் வெனிசுலா முன்னிலையில் உள்ளது. எனினும், பல ஆண்டுகளாக நிலவி வரும் முதலீட்டுப் பற்றாக்குறை, மோசமான எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக அந்நாடு தனது முழுமையான உற்பத்தித் திறனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்காவில் பெற்றோல் விலையை குறைக்க முடியும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவின் பழுதடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பை மீளமைத்து உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல ஆண்டுகளும் பெருமளவிலான முதலீடுகளும் தேவைப்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், இந்த ஒப்பந்தத்தின் தாக்கத்தால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உடனடியாக குறையும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire