தோல்வியிலும் ஆட்டநாயகன் விருதுபெற்ற கேப்டன்! அனல் பறந்த ஆட்டம்
24 ஆடி 2026 வெள்ளி 16:02 | பார்வைகள் : 235
100 பந்துகள் போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 69 ஓட்டங்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தி ஹண்ட்ரெட் 100 பந்துகள் போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மான்செஸ்டர் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் குவித்தது. டிம் செய்பெர்ட் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 67 (45) ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணியில் லுஹான் ட்ரே பிரிட்டோரியஸ் 12 ஓட்டங்களும், கார்ல்ஸன் 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஜேம்ஸ் ரேவ் டக்அவுட் ஆக, அணித்தலைவர் லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone) ருத்ரதாண்டவம் ஆடி அரைசதம் விளாசினார்.
எனினும், லண்டன் ஸ்பிரிட் அணியால் 100 பந்துகளில் 131 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், மான்செஸ்டர் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
40 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் விளாசிய லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire