Paristamil Navigation Paristamil advert login

வார இறுதியில், போக்குவரத்து நெரிசல் – Bison Futé அறிவிப்பு!!

வார இறுதியில், போக்குவரத்து நெரிசல் – Bison Futé அறிவிப்பு!!

24 ஆடி 2026 வெள்ளி 17:13 | பார்வைகள் : 793


வெள்ளிக்கிழமை, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் "சிவப்பு" (Rouge) எச்சரிக்கை நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது "மிகவும் கடினமான போக்குவரத்து நிலையாக" இருக்கும் என்பதை குறிக்கிறது.

ஜூலை மாத இறுதி விடுமுறைக்கு புறப்படும் பயணிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது கடினமாக இருக்கும். ஜூலை 24, வெள்ளிக்கிழமை, புறப்படும் திசையில் பிரான்சின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளுக்கு Bison Futé சிவப்பு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Bourgogne மற்றும் கிழக்கு பிரான்சிலிருந்து வடகிழக்கு எல்லையை நோக்கிச் செல்லும் முக்கிய சாலைகள், போர்டோ Bordeaux வழியாக ஸ்பெயினை அடையும் சாலைகள், மேலும் Île-de-France மற்றும் போர்டோ–துலூஸ் வழியாக மத்தியதரைக் கடல் (Méditerranée) பகுதிக்குச் செல்லும் பாதைகளில் போக்குவரத்து மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, புறப்படும் திசையில் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் மிகுந்த போக்குவரத்து இருக்கும். குறிப்பாக, இல்து-பிரான்ஸிலிருந்து  Normandie, Bretagne, Pays de la Loire, மத்தியதரைக் கடல் பகுதி மற்றும்  Auvergne-Rhône-Alpes பகுதிகளுக்குச் செல்லும் வழிகளில் அதிக நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது.

இல்-து-பிரான்ஸ் பகுதியில், A10 நெடுஞ்சாலையிலும், குறைந்த அளவில் A6 நெடுஞ்சாலையிலும் அதிகாலை முதலே போக்குவரத்து மந்தநிலை தொடங்கக்கூடும். அதன் பின்னர், போக்குவரத்து வேகமாக அதிகரிக்கும் என Bison Futé தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்வது சிறந்தது என்று Bison Futé பரிந்துரைக்கிறது.