மணிரத்னம் – விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதா?
24 ஆடி 2026 வெள்ளி 17:35 | பார்வைகள் : 287
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் – சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தக் லைப்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததைத் தொடர்ந்து, கடந்த ஒரு வருடமாக தனது அடுத்த படத்தின் கதையை உருவாக்குவதில் மணிரத்னம் கவனம் செலுத்தி வந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடிப்பது உறுதியாகியுள்ளது.
படப்பிடிப்பு நேற்று முதல் கோல்கட்டாவில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனராம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், முழுமையாக ஷேவ் செய்யப்பட்ட புதிய தோற்றத்தில் கோல்கட்டா விமான நிலையத்தில் விஜய் சேதுபதி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire