Paristamil Navigation Paristamil advert login

சிவகார்த்திகேயன் இப்போது ஏன் விளம்பர படங்களில் நடிக்கிறார்?’

சிவகார்த்திகேயன் இப்போது ஏன் விளம்பர படங்களில் நடிக்கிறார்?’

24 ஆடி 2026 வெள்ளி 17:41 | பார்வைகள் : 355


நடிகர் சிவகார்த்திகேயன் ஜாலியான காமெடி கலந்த காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும் அவ்வப்போது சில சீரியஸ் கதைகளிலும் நடித்து வருகிறார். அப்படி அவர் முயற்சி செய்த ஹீரோ, வேலைக்காரன், பராசக்தி, மதராஸி ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவில்லை. அதில், அமரன் படம் மட்டுமே அவருக்கு கை கொடுத்தது..

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து 2017ம் வருடம் வெளியான வேலைக்காரன் திரைப்படம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரானது. அந்த பட விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ‘நான் எப்போதும் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன்’ என கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் ‘ஏ.டி.எம்மில் இருந்து தங்கம் எடுக்கலாம்’ என்பது போல ஒரு விளம்பர படத்தில் அவர் நடித்திருக்கிறார். இது தொடர்பான புரமோ வீடியோ வெளியானது. விரைவில் முழு விளம்பர வீடியோ வெளியாகும் என தெரிகிறது..

இதையடுத்து ‘விளம்பர படங்களில் எப்போதும் நடிக்க மாட்டேன் சொன்ன சிவகார்த்திகேயன் இப்போது ஏன் நடிக்கிறார்?’ என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் அதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் நண்பரும் பிரபல இசையமைப்பாளருமான அனிருத் ஒரு பக்கம் பிஸியாக திரைப்படங்களுக்கு இசையமைத்தாலும் ஒரு பக்கம் நிறைய விளம்பர படங்களில் நடித்து கோடிக் கணக்கில் கல்லா கட்டுகிறார். இதை பார்த்துதான் சிவகார்த்திகேயன் மனம் மாறி விளம்பர படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார் என சொல்லப்படுகிறது.