Paristamil Navigation Paristamil advert login

வத்தளையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு - இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

வத்தளையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு - இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

24 ஆடி 2026 வெள்ளி 19:11 | பார்வைகள் : 289


வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களைக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவளவில் வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள வரவேற்பு மண்டபமொன்றில் நடைபெற்ற விருந்தொன்றிற்குள் புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருந்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், இலக்குத் தவறியதால் அவருக்கு அருகில் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.