Bourg-la-Reine மற்றும் Gare du Nord இடையே RER B சேவை நிறுத்தம்!!
25 ஆடி 2026 சனி 15:21 | பார்வைகள் : 1095
இன்று முதல் ஆகஸ்ட் 6 வரை, RER B தொடருந்து சேவை Gare du Nord மற்றும் Bourg-la-Reine நிலையங்களுக்கு இடையே முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நிறுத்தம், தொடருந்து பாதையை நவீனமயமாக்கும் பணிகளுக்காக மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், பரிசின் தெற்குப் பகுதிகளில் இருந்து நகர மையத்திற்குச் செல்லும் பயணிகள் மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட மாற்று வழிகள்:
- மெட்ரோ 4 அல்லது பிற மெட்ரோ இணைப்புகளைப் பயன்படுத்தலாம்.
- RATP மாற்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- சில இடங்களில் டிராம் மற்றும் வழக்கமான பேருந்து சேவைகளும் இணைப்பாக பயன்படுத்தப்படலாம்.
- பயண நேரம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கக்கூடும்; எனவே முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire