Paristamil Navigation Paristamil advert login

ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக மாறுகிறதா?

ரஜினியின்  வாழ்க்கை வரலாறு படமாக மாறுகிறதா?

25 ஆடி 2026 சனி 17:30 | பார்வைகள் : 185


தமிழ் சினிமாவில் 50 வருடங்களுக்கு மேல் நடித்து வருபவர் ரஜினிகாந்த். அபூர்வராகம் படத்தில் தொடங்கி ஜெயிலர் 2 வரை 172 படங்களில் ரஜினி நடித்து விட்டார். 173-வது திரைப்படமாக தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்திய திரையுலகம் ரஜினியை சூப்பர்ஸ்டார் எனவும், தலைவர் எனவும் கொண்டாடுகிறது.

இந்நிலையில்தான், நடிகர் ரஜினிகாந்த் தான் கடந்து வந்த பாதையை ஒரு சுயசரிதை புத்தகமாக எழுதி வருகிறார். ஒரு கட்டத்தில் இதை திரைப்படமாக எடுத்தால் என்ன என்கிற எண்ணம் ரஜினிக்கு வந்திருக்கிறதாம். எனவே தனக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் இயக்குனர்களிடம் இதுபற்றி ரஜினி ஆலோசித்து வருகிறாராம்.

எனவே ரஜினியின் சுயசரிதை ஒரு பக்கம் புத்தகமாகவும், ஒரு பக்கம் திரைப்படமாகவும் உருவாக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தீவிர ரஜினி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.