2026 வெப்பஅலை போனஸ் யாருக்கு கிடைக்கும்? அதை எப்படி பெறுவது?
25 ஆடி 2026 சனி 21:18 | பார்வைகள் : 1696
2026 ஆம் ஆண்டிலும் "வெப்பஅலை போனஸ்" (Prime Canicule) என்பது பிரான்சில் அனைத்து ஊழியர்களுக்கும் தானாக வழங்கப்படும் சட்டப்பூர்வமான கொடுப்பனவு அல்ல. இருப்பினும், நீண்ட நேரம் 30°C அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் பணிபுரியும் சில ஊழியர்கள், வேலைக்கான கடினமான சூழல் (pénibilité) தொடர்பான சலுகைகள் மற்றும் இழப்பீடுகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் போனஸ் கிடைப்பது:
- கூட்டு தொழிலாளர் ஒப்பந்தம் (Convention collective),
- நிறுவன ஒப்பந்தம்,
- அல்லது முதலாளியின் தனிப்பட்ட முடிவு
கட்டுமானம் (BTP), விவசாயம், குப்பை சேகரிப்பு, சரக்கு விநியோகம் மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடும் ஊழியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக BTP துறையில், கடுமையான வெப்பத்தால் பணிகள் நிறுத்தப்பட்டால், சில நிபந்தனைகளின் கீழ் ஊழியர்கள் தங்களின் மணி நேர ஊதியத்தின் 75% வரை இழப்பீடாகப் பெறலாம்.
இதற்கான சில நிபந்தனைகள்:
- குறைந்தது 4 வார வேலை ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
- பிரான்ஸ் சமூக பாதுகாப்பு (Sécurité sociale) திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட அபாய அளவை விட அதிகமாக வெப்பத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
சட்டப்படி,
- 5°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலை, அல்லது
- 30°C அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை
முதலாளிகள் அதிக வெப்பத்தால் ஏற்படும் அபாயங்களில் இருந்து ஊழியர்களைப் பாதுகாப்பது சட்டப்பூர்வ கடமையாகும். அதற்காக போதுமான குடிநீர், ஓய்வு நேரம், வேலை நேர மாற்றம், குளிரூட்டும் வசதிகள் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்த வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால், ஊழியர்கள் தங்கள் உயிர் அல்லது உடல்நலத்திற்கு ஆபத்து இருப்பதாகக் கருதினால், வேலை நிறுத்தும் உரிமையை (Droit de retrait) பயன்படுத்தலாம்.
உங்கள் வேலை கடினமான சூழலாக அங்கீகரிக்கப்பட்டால், முதலாளர் அதை Déclaration Sociale Nominative (DSN) மூலம் பதிவு செய்து, Compte Professionnel de Prévention (C2P) கணக்கில் புள்ளிகள் சேர்க்க வேண்டும்.
இந்த C2P புள்ளிகளை பயன்படுத்தி:
- தொழில்பயிற்சி பெறலாம்,
- சம்பள இழப்பின்றி பகுதி நேர வேலை செய்யலாம்,
- அல்லது முன்கூட்டியே ஓய்வு பெறலாம்.
முதலாளி தனது கடமைகளை நிறைவேற்றவில்லை என்றால், ஊழியர்கள் மேலதிகாரி, தொழிலாளர் பிரதிநிதிகள், CSE அல்லது தொழிலாளர் ஆய்வுத்துறையில் (Inspection du travail) புகார் அளிக்கலாம். எனவே, "வெப்பஅலை போனஸ்" அனைவருக்கும் கிடைக்காவிட்டாலும், அதிக வெப்பத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்ய பல சட்டப் பாதுகாப்புகள் நடைமுறையில் உள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire